tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதம் - ஒஇசிடி மதிப்பீடு

நடப்பு 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதமாக இருக்கும் என்று ஒஇசிடி மதிப்பிட்டுள்ளது. 

2019-20 நிதியாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து, பல அமைப்புகள் பல்வேறு விதமாக தங்களது அறிக்கைகளை வெளியிட்டிருந்து. அதில் உலக வங்கி முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என்றும்,  ஐ.எம்.எஃப், ஏடி.பி மற்றும் எக்னாமிக் சர்வே ஆகியவற்றின் அறிக்கைகளில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்றும், ஆர்.பி.ஐ அறிக்கையில் 6.9 சதவீதம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதமாக இருக்கும் என்று ஒஇசிடி மதிப்பிட்டுள்ளது. 

பாரிஸை தளமாகக் கொண்ட கொள்கை அமைப்பான ஓ.இ.சி.டி (The Organisation for Economic Co-operation and Development) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விகிதத்தை முந்தைய கணிப்பில் 1.3 சதவீதம் குறைத்து 5.9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் கணிப்பில் 1.1 சதவிகிதம் குறைத்து, 6.3 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. 

மேலும் அதன் அறிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை சர்வதேச அளவில் பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த பொருளாதார மந்தம், கடந்த 2008 - 2009ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 3.6 சதவீதமாக இருந்த உலக பொருளாதாரம், இந்த ஆண்டு 2.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என்றுன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


 

;